கோவை : கோவை மாநகராட்சி சார்பில் நகரின் முக்கிய கட்டிடங்களில் சர்வதேச புகழ்பெற்ற 'ஸ்ட்ரீட் ஆர்ட்' கலைஞர்களைக் கொண்டு வண்ணமயமான பிரமாண்ட ஓவியங்கள் வரையப்படவுள்ளன.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையை சீர்மிகு நகரமாக உருவாக்க ஸ்மார்ட் வைஃபை மரங்கள், அழகான குளக்கரைகளை உருவாக்குதல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நகரின் உயரமான அரசு கட்டிடங்களில் எழில்மிகு வண்ணச்சுவர் ஓவியங்களை வரைந்திட கோவை மாநகராட்சி முடிவு செய்து, இத்தாலியைச் சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் தலைமையிலான குழுவினரோடு கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் 15-ம் தேதி முதல் சுவர் ஓவியம் வரையும் பணிகளை ஓவியக் கலைஞர்கள் மேற்கொள்ள உள்ளனர். இக்குழுவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓவியர்களும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்குபெறுகின்றனர்.
ஓவியம் வரைவதற்கான சுவர், ஓவியர்களின் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை மாநகராட்சி ஏற்றுக்கொள்கிறது. பன்னாட்டு ஓவியர்களைக் கொண்ட இக்குழு பல நாடுகளில் இலவசமாக சுவர் ஓவியங்களை வரைந்து, தங்களது கலைச்சேவையை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

நகரின் பெரும்பாலான சுவர்கள் போஸ்டர்களாலும், அரசியல் கட்சி பெயர்களாலும் நிறைந்து மிக மோசமான நிலையில் காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், இந்த மாதிரியான சுவர் ஓவியங்கள் உருவாக்கும் மாநகராட்சியின் திட்டம், கோவையைச் சேர்ந்த ஓவியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
"சுவர் ஓவியம் என்பது மகத்தான ஓவியக் கலை. அனுபவம் மட்டும் இந்த கலைக்கு போதாது. பல அடி உயரத்தில் ஏறி மிக நேர்த்தியாக ஓவியங்களை வரைய வேண்டும். கோவையின் சில சுவர்களில் தற்போது சுவர் ஓவியம் காணப்படுகின்றன. அவற்றைவிட மிக பிரம்மாண்டமான முறையில் பன்னாட்டு ஓவியக் கலைஞர்களைக் கொண்டு சுவர் ஓவியங்கள் வரையப்படவுள்ளன. இவை நகரின் அழகை மேலும் அதிகரிக்கும். கோவையைச் சேர்ந்த இளம் ஓவியர்கள் பன்னாட்டு ஓவியர்களின் கலை நுணுக்கங்களை அறிந்து கொள்ள அரிய வாய்ப்பாகும்," என்றார் சித்ர கலா ஆர்ட்ஸ் அகாடெமியின் தலைவர் ஜீவானந்தம்.

சுவர் ஓவியத்திற்காக டவுன்ஹால் பகுதியில் உள்ள நூலக கட்டிடம், மாவட்ட காவல் அலுவலக கட்டிடம், ரெட் க்ராஸ் கட்டிடம் மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டிடம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதத்திற்குள் இந்த கட்டிடங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வண்ணமயமாகக் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.