கோவை : தமிழகத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகும் விதமாக தீயணைப்பு துறையினர் சார்பில் குறிச்சி குளத்தில் மீட்புப் பணிகள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை : தமிழகத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகும் விதமாக தீயணைப்பு துறையினர் சார்பில் குறிச்சி குளத்தில் மீட்புப் பணிகள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். கோவையில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

ஏற்கெனவே குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில், மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால் அரசுத்துறையில் உள்ள அனைத்து துறைகளிலும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். மேலும், மழை, வெள்ள பாதிப்புகள் ஏதாவது வந்தால் அதை சமாளிப்பதற்கான அனைத்து உபகரணங்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகும் இடங்களுக்குச் சென்று மீட்புப்பணியில் மேற்கொள்ள ரப்பர் படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொழுது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினர் எப்படி செயல்படுகிறார்கள், அவர்களின் பணி என்ன..? என்பதை அறிந்து, ஆபத்து காலங்களில் பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையொட்டி, கோவை குறிச்சி குளத்தில் தீயணைப்பு துறையினர் சார்பில் மீட்புப் பணிகள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. குளத்து நீரில் விழுந்து கிடக்கும் சிறுவனை மீட்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினர் ஈடுபட்டு, ஒத்திகை பார்த்தனர்.
எப்போது பரபரப்பாக காணப்படும் சாலையின் அருகே உள்ள குறிச்சி குளத்தில் திடீரென தீயணைப்பு துறையினர் இறங்கி படகில் பயணம் செய்த காட்சிகள் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
