டி.டி.வி. தினகரனை ஓ.பி.எஸ்., சந்தித்ததாக வெளியான செய்திக்கு சூலூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ. வரவேற்பு

கோவை : டி.டி.வி. தினகரனை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பிற்கு சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கனகராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கோவை : டி.டி.வி. தினகரனை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பிற்கு சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கனகராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கனகராஜ் சூலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- டி.டி.வி தினகரன் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் சந்திப்பு நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது. தினகரனுடன் பேசி முடிவெடுக்க வேண்டும் என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இருதரப்பும் ஒன்று சேர வேண்டும். ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே எந்த பிரச்சினையும் இல்லை. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகிய 3 பேரும் ஓன்று சேர 100 சதவீதம் வாய்ப்புள்ளது. 

நீர் அடித்து நீர் விலகாது, கோழி மிதித்து குஞ்சு சாகாது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டாயம் டி.டி.வி. தினகரனை ஏற்றுக்கொள்வார். வெளியில் இருப்பவர்களையும் ஒன்றிணைத்து அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., டி.டி.வி., தினகரன் வேறு வேறு இல்லை. ஓ.பி.எஸ். - டி.டி.வி. தினகரன் சந்திப்பு என்பது சூப்பரான ஓன்று. குருப்பெயர்ச்சி வந்தவுடன் அ.தி.மு.க.,விற்கு நல்ல காலம் துவங்கி விட்டது. அ.தி.மு.க.,வில் யார் எந்த பதவிக்கு வந்தாலும், யார் முதலமைச்சராக வந்தாலும் கவலையில்லை. அனைவரும் ஒன்று சேர வேண்டும். 

 

விலகி வருவதும் கிட்ட செல்வதும் கட்சிகளுக்கு புதிதல்ல. எல்லாரும் விட்டுக்கொடுத்து அம்மாவின் ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும். எல்லாரும் ஒன்று சேர்ந்தால்தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையும். டி.டி.வி. தினகரனுடன் நாங்கள் ஒன்று சேர்ந்தால் தி.மு.க. டெபாசிட் இழக்கும். தனித்தனியாக இருந்தால் தி.மு.க. டெபாசிட் வாங்கும். ஆகவே, இணைவது குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். கட்டாயம் மூன்று பேரும் ஓன்று சேருவார்கள், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...