பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு பயணம் இலவசம்: கோவையை கலக்கும் தனியார் பேருந்தின் அறிவிப்பு

கோவை: கோவை மாநகர் பகுதியில் இயங்கி வரும் விஜய் டிரான்ஸ்போர்ட் என்கிற தனியார் பேருந்து பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை: கோவை மாநகர் பகுதியில் இயங்கி வரும் விஜய் டிரான்ஸ்போர்ட் என்கிற தனியார் பேருந்து பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

1C ஒண்டிப்புதுார் - வடவள்ளி ஒரு பேருந்து, S1 ஒண்டிப்புதுார் - மணியகாரம்பாளையம் இரண்டு பேருந்துகள், 7a காந்திபார்க் - காந்திபார்க் ஒரு பேருந்து, S9 ஒண்டிப்புதூர் - உடையாம்பாளையம் என்கிற வழித்தடங்களில் விஜய் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் 5 பேருந்துகளை இயக்கி வருகிறது. 

இந்த பேருந்துகளில் செல்லும் பள்ளி மாணவர்கள், 5 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது. பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு இலவசம். இதற்கு அடையாள அட்டை அல்லது பஸ் பாஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும். பள்ளி சீருடையில் இருந்தால் அதுவும் தேவையில்லை. பெற்றோரை இழந்த மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் பெற்ற கடிதத்தைக் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.



இது குறித்து விஜய் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் கிஷோர் கூறுகையில், ''இந்த சலுகைகள் பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பேருந்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பெற்றோரை இழந்த மாணவர்கள் படிப்பதே சிரமம் என்பதால், அவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

மீதமுள்ள மாணவர்களிடம் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் ரூ.5 மட்டுமே. எங்கள் நிறுவனத்தின் கீழ் இயங்கும், ஐந்து பேருந்துகளிலும் பள்ளி மாணவர்களுக்கு இச்சலுகை உண்டு. கடந்த 50 ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் இயங்கிவருகிறது. இதன் ஆதரவைப் பொறுத்து மேலும் பல சலுகைகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.'' என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...