கலப்படமற்ற பருத்தி கிடைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் 'சைமா'

கோவை: கலப்படமற்ற சுத்தமான பருத்தி கிடைக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தலையிட வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா-SIMA) தென்னிந்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை: கலப்படமற்ற சுத்தமான பருத்தி கிடைக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தலையிட வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா-SIMA) தென்னிந்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.



இது தொடர்பாக சைமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பருத்தி தொழில்நுட்ப குழுவை மீண்டும் புதிய வடிவத்தில் இரண்டு குழுக்களாக பிரித்து ஒன்றை தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மற்றொன்றை தொழில் நுட்ப பரிமாற்றத்திற்கும் மத்திய விவசாய அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி வருகிறது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் ஒரு திட்டத்தை தயாரித்து அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த திட்டத்தின் நோக்கம் சுத்தமான பருத்தியை வழங்க ஏற்பாடு செய்வது மற்றும் இந்திய பருத்தி ஜவுளிப் பொருட்களுக்கு உலக அளவில் முத்திரை பெறுவதாகும்.

ஜின்னிங் ஆலைகள் பின்பற்றும் தவறான முறைகளால் இந்தியா மோசமான பருத்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளதாக சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தனது ஆய்வில் கூறியுள்ளது.

பருத்தியுடன் தரமற்ற பருத்தியை கலந்தும், எடையை கூட்ட தண்ணீரையும் சேர்க்கின்றனர். இது குறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் நடராஜ் கூறுகையில், மத்திய அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜின்னிங் ஆலைகள் செய்யும் கலப்பட முறைகேடுகளை தடுக்க வேண்டும். இந்திய பருத்தி கழகத்திற்கு அதிகாரம் வழங்கி கலப்படத்தை தடுக்க வேண்டும்." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...