இ.பி.எஸை பதவியிறக்கி விட்டு, தனக்கு முதலமைச்சர் பதவி தருவதாகக் கூறினார் ஓ.பி.எஸ். : டி.டி.வி., தினகரனின் பேட்டியால் பரபரப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து இறக்கிவிட்டு தனக்கு பதவி தருவதாக ஓ.பி.ஸ். தன்னை நேரில் சந்தித்து கூறியதாக டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து இறக்கிவிட்டு தனக்கு பதவி தருவதாக ஓ.பி.ஸ். தன்னை நேரில் சந்தித்து கூறியதாக டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி டிடிவி தினகரனை சந்தித்து, ஆட்சியமைக்க ஆதரவு கோரியதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் அளித்த பேட்டி தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியது. 

ஆனால், இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்துள்ளனர். அ.தி.மு.க.,வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டி.டி.வி. தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2017 ஜூலை 12-ல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி அவரை சந்தித்தேன். அவர் என்னை சந்தித்தது உண்மை. தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் பன்னீர்செல்வம் கூறினார். 

என்னை சந்தித்ததை பன்னீர்செல்வம் மறுக்க மாட்டார். மறுக்க முடியாத அளவிற்கு ரகசியங்கள் உள்ளன. மேலும், கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் தன்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். பழனிசாமியை இறக்கிவிட்டு, எனக்கு பதவி தர விரும்பினார். அமைச்சர் தங்கமணியும், வேலுமணியும் என்னை துணை முதலமைச்சர் ஆக்க முயன்றனர். பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, டி.டி.வி. தினகரனை நீங்கள் பார்த்தீர்களா? என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அது கடந்த காலம், எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...