கோவை : தமிழகம் - கேரள எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த கோவையைச் சேர்ந்த மாவோயிஸ்ட்டை பாலக்காடு போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் மாவோயிஸ்ட்கள் சட்டவிரோதமாக நடமாடி வருகின்றனர். அவர்களைத் தடுக்கும் வகையில், இருமாநில போலீசாரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கோவை மாவட்ட போலீசாரும் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல, பாலக்காடு மாவட்ட எஸ்.பி.தேவேஸ்குமார் பெகரா, ஏ.எஸ்.பி. சுஜித்தாஸ் தலைமையிலான அதிரடி படையினரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாலக்காடு மாவட்டம் அகளி அருகே பதுங்கியிருந்த தேனேஸ் (எ) டென்னீஸ் (வயது 28) என்பவரை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் அழைத்துச் சென்று பாலக்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள போலீசாரால் கைது செய்யப்பட்ட தேனேஸ் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர், கடந்த 2 ஆண்டுகளாக அட்டப்பாடி வனப்பகுதியில் பதுங்கியிருந்து மாவோயிஸ்ட் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.