நீலகிரி : நிலத்தடி நீரை எடுத்து வணிக ரீதியான முறையில் தண்ணீரை விற்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி : நிலத்தடி நீரை எடுத்து வணிக ரீதியான முறையில் தண்ணீரை விற்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேஜ்கள், ரிசார்ட்டுகள், ஹோட்டல்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் லாரிகள் மூலம் நிலத்தடி நீரை எடுத்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உட்பட 32 மாவட்ட ஆட்சியர்கள் நிலத்தடி நீர் குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், வணிக ரீதியாக செயல்பட்டு வரும் ரிசார்ட்டுகள், காட்டேஜ்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் விற்பதற்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், மேற்கண்ட நடவடிக்கைகளில் அந்தந்த வட்டாச்சியர்கள் கவனிப்பார்கள். இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டம் என்பதால் தேவைப்படுவோருக்கு அந்தந்த நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும், இவ்வாறு கூறியுள்ளார்.