கோவை: தொலை தொடர்பு துறை பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பணியாளர்களுக்கு கடன் தர மறுப்பதாகக் கூறி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ரயில்வே நிலையம் எதிரில் உள்ள தொலை தொடர்பு துறை பணியாளர் கூட்டுறவு சங்கத்தை இன்று முற்றுகையிட்டனர்.

மேலும், கூட்டுறவு சங்க செயலாளர் அறையில் அமர்ந்து கேரோவில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "எங்களிடம் மாதா மாதம் ஊதியத்தின் ஒரு பகுதியை கூட்டுறவு சங்கத்தின் சந்தா என்ற பெயரில் பிடிக்கின்றனர். ஆனால், எந்த ஊழியருக்கும் அவசரக் காலத்தில் கூட கடன் வழங்கப்படுவதில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் வழங்கும் வரை இங்கிருந்து கலைந்து செல்லப் போவதில்லை." என்றனர்.

தொடர்ந்து தற்போது அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.