கோவை: வெள்ளலூரில் புதிதாக மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளலூர் பகுதியில் புதிதாக அரசு மதுபானக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பள்ளி, குடியிருப்புகளுக்கு அருகே மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். கடந்த பத்து ஆண்டுகளாக மதுபானக்கடை இல்லாத நிலையில் புதிதாக மதுபானக்கடை திறப்பது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்றும், மாணவர்கள் மது பழக்கத்திற்கு ஆளாக வாய்ப்பிருப்பதாகவும் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தினர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.