கோவை: பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை கண்டித்தும், அதனை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் கோவை மாவட்ட இளைஞர் அணி தலைவர் அசோக் ஸ்ரீநிதி தலைமையில் ஒரு பிரிவினர் பவர் ஹவுஸ் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினரிடம் அனுமதி கேட்டு இருந்தனர். மாவட்ட பொறுப்பாளர் குமார் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதி கோரிய நிலையில் இரு அணியாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு ஒரு அணியாக போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அசோக் ஸ்ரீநிதி தலைமையிலான அணி ஒரு புறமும், குமார் தலைமையிலான ஒரு புறமும் நின்றதால் போலீசார் அவர்களை ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூறியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒரு அணியாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.,வினர் பங்கேற்றனர்.

இரு பிரிவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் தொண்டர்கள் குழப்பத்துடனேயே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.