கோவை: கோவை மாவட்டத்தில் மழை வெள்ளம் மற்றும் நோய் பாதிப்பு ஏற்பட அறிகுறி உள்ள பகுதிகளில் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் 1000-க்கும் மேற்பட்ட கழிவுநீர் குட்டை, சிறு தடுப்பணைகள் உள்ளது.
மழைநீர் முழுவதும் குளம் குட்டைகளில் சேர்க்கும் வகையில் வாய்க்காலை சீரமைக்க நீர்வழிப்பாதை அமைப்புகளை சரி செய்ய
மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 1 மற்றும் 2 பவானி ஆறு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சிறுவாணி, பவானி குடிநீர் திட்ட குழாய் பல இடங்களில் பழுதடைந்த நிலையில் இருக்கிறது.
குடிநீரில் சாக்கடை கலப்பதைத் தடுக்க பழுதடைந்துள்ள குழாய்களை மாற்றும் பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குடிநீரில் குளோரின் பவுடர் கலப்பதை இரு மடங்கு அதிகரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் வசிக்கும் வீடுகளில் உள்ள நிலத்தடி நீர்மட்ட தொட்டிகள், மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில், அபேட் என்ற கொசு ஒழிப்பு மருந்தைத் தெளிக்க வேண்டும் எனவும் குடிநீரில் கழிவுநீர் கலப்பு இருக்கிறதா? என கண்டறிந்து அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கினால் உடனடியாக அதனை அகற்றவேண்டும், மழையால் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, டைபாய்டு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், மழை வெள்ளப் பாதிப்பு நோய் பாதிப்புள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.