தி.மு.க ஆட்சிக்கு வரும் போது அ.தி.மு.க அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள் : கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கோவை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் எனவும் அப்போது அ.தி.மு.க அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள் எனவும் கோவை மாவட்டம் பனப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


கோவை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் எனவும் அப்போது அ.தி.மு.க அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள் எனவும் கோவை மாவட்டம் பனப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள பனப்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க அரசின் ஊழலை மக்களிடம் விளக்கும் விதமாக தி.மு.க சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் மு.கண்ணப்பன்,

உதயநிதி ஸ்டாலின், மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.



உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்த நிர்வாகிகளிடம் மேடையில் இருப்பது பெருமையல்ல, கீழே தொண்டர்களுடன் அமர்ந்து கொள்கின்றேன் என்று கூறினேன். ஆனால், என்னை கட்டாயப்படுத்தி மேடையில் ஏற்றியிருக்கின்றனர். மேடையில் இருப்பதால் தொண்டர்களை பார்க்க முடிகின்றது.

இங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றம் சென்று போராடித்தான் இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்கி இருக்கின்றோம். போராடித்தான் கலைஞருக்கு மெரீனாவில் இடம் வாங்கினோம். பொதுக்கூட்டம் நடத்தவும் போராடித்தான் அனுமதி வாங்கியுள்ளோம்.

தி.மு.க என்றாலே போராட்டம் தான். தி.மு.க.,விற்காக உழைத்த கட்சியின் முன்னோடிகளுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது ஜெயலலிதா உயிரோடு இருந்தால் பெங்களூர் சிறையில் தான் இருந்திருப்பார்.

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது அ.தி.மு.க அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அல்ல அவர் எஸ்.பி.ஊழல்மணி. தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக இல்லை என்பதால் தான் போராடுகின்றனர். இது தெரியாமல் அதிக போராட்டம் இங்குதான் நடக்கின்றது என முதல்வர் பெருமையாக சொல்கின்றார்.

உழைப்பால் உயர்ந்தவர் தலைவர் ஸ்டாலின். ஸ்டாலின் குறுக்கு வழியில் வந்து விட்டதாக சசிகலா காலில் விழுந்து முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி சொல்கின்றார். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி வரிசையில் வந்து விட்டார் என எடப்பாடி பழனிச்சாமி சொல்கின்றார். ஆமாம் நான் வரிசையில் கடைசியில் நிற்கின்றேன். தி.மு.க தொண்டர்களுடன் தோள்கொடுத்து நிற்கின்றேன்." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...