திருப்பூர் : திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக பின்னலாடை நிறுவனங்களில் மழை நீர் புகுந்ததால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் சேதமடைந்தன.

திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி, காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 தினங்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்த சிட்கோ பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதன் காரணமாக சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள் நீரில் சேதமடைந்தன.

சாக்கடை கழிவு நீர் திட்டப்பணிகள் திட்டமிடாமல் கட்டப்பட்டதே, மழைபெய்யும் போதெல்லாம் பின்னலாடை நிறுவனங்களில் மழைநீர் புகுவதற்கு காரணம் என பின்னலாடை நிறுவனத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.