கோவை : ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் மற்றும் 24 மணிநேர குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை ஆணையாளர் ப.காந்திமதி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் (திட்டங்கள்) எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், 24 மணிநேர குடிநீர் விநியோகத்திற்கான கட்டமைப்பு பணிகளைத் தரமானதாகவும், குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.