நீலகிரி : விபத்துக்களைத் தடுக்கும் வகையில், கடினமான பாதைகளைக் கொண்ட கல்லட்டி மலை சாலைகளை சமவெளி பகுதிகளில் வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டாம் என வனத்துறையினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக வரும் கல்லட்டி மலைப்பாதை உருவாகி வருகிறது. காரணம், மலைப்பகுதிகளில் வாகனம் ஓட்டும் அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதே ஆகும். எனவே, விபத்துக்களை தடுக்கும் விதமாக, சமவெளி பகுதிகளில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் இந்த சாலைகளில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல், சிலர் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் உயிர் சேதங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுவாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மைசூர் செல்வதற்கு கூடலூர் வழியைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செல்லும் போது 25 கிலோ மீட்டர் வரை தூரம் அதிகரிக்கும் என்ற காரணத்தினால், பெரும்பாலும் வாகன ஓட்டிகள் கல்லட்டி மலைப்பாதையையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பாதையில் செல்வதன் மூலம் 25 கிலோமீட்டர் தூரம் குறைவாக செல்வதாலும், வழியில் செல்லும் போது சில சுற்றுலா காட்சிகளை காணலாம் என்பதாலும் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், எந்த சூழ்நிலையிலும் சமவெளிப் பகுதிகளில் வாகனங்களை ஓட்டுபவர்கள் இந்த சாலையை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றும், மலைப்பகுதியில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த சாலையில் ஒட்டவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் சோதனைச் சாவடி அமைத்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கல்லட்டி மலைப்பாதையில் 35 கொண்டை ஊசி வளைவுகளில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், இப்பகுதியில் 2-வது கியரில் மட்டுமே செல்ல முடியும். அவ்வப்போது வாகனங்களை நிறுத்தி, நிறுத்திச் செல்ல வேண்டும். சாலையின் எதிர்புறத்தில் வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக குவிலென்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்நிலையிலும் கூட, இவற்றையெல்லாம் கடந்து சமவெளியில் ஓட்டுநர் பயிற்சி பெற்றவர்கள் இப்பகுதியில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.
நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் இந்த கல்லட்டி சாலையில் பயணித்த போது விபத்தில் சிக்கினர். இரண்டு நாள் வரை விபத்து குறித்த விபரம் தெரியாத நிலையில், அழுகியலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் காரணமாக இனி வரும் காலங்களில் இந்த சாலையில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும், சமவெளி பகுதிகளில் இருந்து வரும் ஓட்டுநர்களை மிக நிச்சயமாக இந்த சாலையில் பயணிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தியுள்ளனர்.