திருப்பூர் : சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 115-வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்ட போது, வெள்ளையர்களின் காவல்துறை தாக்கியதில் தேசியக் கொடியினை கையில் பிடித்தவாறு உயிர்நீத்த திருப்பூர் குமரனின் 115-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, முன்னிட்டு கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் தெற்கு, வடக்கு, பல்லடம் மற்றும் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர்கள் திருப்பூர் ரயில் நிலையம் அருகே இருக்கும் திருப்பூர் குமரன் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- திருப்பூர் குமரனுக்கு அரசு மரியாதை செய்ய அரசாணை பிறப்பித்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். அதனடிப்படையில், அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்பட விரைவில் 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளன. நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அரசு சரியாக இருக்கிறது. நாங்கள் திட்டங்களை மக்களிடம் சேர்க்கிறோம். அவர்கள் எங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறார்கள், என்றார்.