பெட்ரோல், டீசல் விலையில் ரூ. 2.50 குறைக்க மத்திய அரசு முடிவு

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், ரூ. 2.50 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், ரூ. 2.50 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே உயர்ந்து சென்ற நிலையில் மத்திய அரசு வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு, பெட்ரோல், டீசலையும் அதன்கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. ஆனால், கலால் வரி குறைப்பு என்பதே கிடையாது என்ற ஸ்திரமான நிலையே மத்திய அரசு பின்பற்றியது. 

இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் விற்பனையாகி வருகிறது. எனவே, கடந்த மாதம் 10-ம் தேதி இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இருப்பினும் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வில் தடையில்லாத நிலையே சென்றது. 

இந்த நிலையில், பிரதமர் மோடியின் தலைமையில் ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு, வர்த்தக பற்றாக்குறை தொடர்பாக மூத்த அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது :- பெட்ரோல், டீசல் விலையில் ரூ. 2.50 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது, பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் ரூ. 2.50 குறைக்க வலியுறுத்தப்படும். இதுதொடர்பாக மாநிலங்களுக்கு கடிதம் எழுதப்படும். மத்திய அரசின் வலியுறுத்தலை மாநில அரசுகள் ஏற்றால் விலை ரூ.5 குறைய வாய்ப்புள்ளது, என கூறியுள்ளார்.

தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...