கோவை : இருசக்கர வாகனத்தில் வியாபார நோக்கில் பயணியை ஏற்றிச்சென்ற 4 இருசக்கர வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார்.
கோவை : இருசக்கர வாகனத்தில் வியாபார நோக்கில் பயணியை ஏற்றிச்சென்ற 4 இருசக்கர வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார்.
கோவையில் கடந்த ஜீன் மாதம் ரேபிட்டோ பைக் டேக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது. ரேபிட்டோ நிறுவனம் கடந்த மாத இறுதியில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஹெல்மேட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் தலைமையில் நடத்தியிருந்தது.
இந்த நிலையில், ரேபிட்டோ செயலி மூலம் செல்போனில் இருந்து பதிவு செய்தால், பயணியை ஏற்றிச்செல்ல 30-க்கும் மேற்பட்ட பைக்குகள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிகிறது.
சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய இருசக்கர வாகனத்தில், பயணிகளிடம் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3 முதல் ரூ. 7 வரை கட்டணமாக பெற்று ரேபிட்டோ நிறுவனம் கூட்டிச் செல்வதாக கூறப்படுகிறது. சொந்த உபயோகத்திற்காகப் பயன்படுத்தும் வாகனங்களை, கட்டணம் வாங்கிக்கொண்டு பயன்படுத்துவதாக, கூறி ஆட்டோ ஒட்டுநர்கள் நான்கு இருசக்கர வாகனத்தைப் பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

நான்கு பேரிடமும் விசாரித்த வட்டார போக்குவரத்து அலுவலர், விதிகளுக்கு மீறி சொந்த வாகனத்தைப் பயணிகளை கூட்டிச்செல்ல பயன்படுத்தியதால், அவர்களது இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தார். மேலும், இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்தவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது. பயணிகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்செல்லும் சேவையளிக்க சட்டத்தில் முறையான இடம் இல்லை எனத் தெரிகிறது. இதனால், ஆட்டோ ஒட்டுநர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாகக் கூறி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.