நீலகிரி : ரபேல் போர் விமான ஊழல் குறித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் விரைவில் கண்டன பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- தி.மு.க.,வுடன் காங்கிரஸ் உறவு பலமாக இருக்கிறது. கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும். மேலும், ரபேல் போர் விமான ஊழல் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன பேரணியை விரைவில் நடத்த உள்ளோம். தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில், 2004-ல் வெற்றி பெற்றது போல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெறும். இதேபோல, அ.தி.மு.க., பா.ஜ.க. ஊழலை 4 மாதங்களில் அடித்தட்டு மக்களிடம் கொண்டு திட்டமிட்டுள்ளோம், என்றார்.