தொங்கும் தகடுகள், வீழ்த்தும் சேறுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அவினாசி மேம்பாலம் : உயிரைப் பணையம் வைத்து வாகனத்தை ஓட்டும் வாகன ஓட்டிகள்

கோவை : உப்பிலிபாளையத்தில் உள்ள அவினாசி மேம்பாலம் கீழ் உள்ள சுரங்கபாதை சாலை மழையால் சேறாகவும், கழிவு நீர் சூழ்ந்து காணப்படுவதாலும் வாகன ஒட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

கோவை : உப்பிலிபாளையத்தில் உள்ள அவினாசி மேம்பாலம் கீழ் உள்ள சுரங்கபாதை சாலை மழையால் சேறாகவும், கழிவு நீர் சூழ்ந்து காணப்படுவதாலும் வாகன ஒட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.



உப்பிலிபாளையத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், ரயில் போக்குவரத்தினால் வாகனங்கள் தடையின்றி செல்லவும் அவினாசி சாலை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் உள்ள ரவுண்டானாவில் இருந்து ரயில் நிலையம் பின்புறம், கூட்செட் சாலை, மரக்கடை, ப்ருக்பாண்ட் ரோடு, பூ மார்க்கெட் ஆகிய இடங்களுக்குப் பாதை பிரிந்து செல்கிறது. அதே போல, மேம்பாலத்தின் கீழும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இந்த இடங்களுக்கு செல்ல சாலைகள் உள்ளன. 



இந்த சுரங்கபாதையின் மேல் பகுதியில் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு செல்ல இரண்டு ரயில் பாதைகள் உள்ளன. ரயில்கள் செல்லும் போது அதன் கழிவு நீர்கள் வாகன ஒட்டிகள் மேல் விழுவதால் பிரச்சினை ஏற்படுகிறது. அதனை தவிர்க்க தண்டவாளத்தின் அடிப்பகுதியில் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த தகடுகள் கிழிந்தும், பராமரிப்பின்றி நகர்ந்தும் சில சமயங்களில் வாகன ஒட்டிகளை அச்சுறுத்தும் விதமாக கீழே விழும் சூழலில் உள்ளன. அவ்வப்போது இதனை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்தும் வருகின்றனர்.



இது குறித்து அவ்வழியாக தினமும் அலுவகத்திற்கு பயணிக்கும் வாகன ஒட்டியான கு.முத்துராம கிருஷ்ணன் கூறுகையில், "கடந்த 10 வருடங்களாக நான் இவ்வழியாகப் பயணிக்கின்றேன். எப்போது தகடு விழும் என தெரியவில்லை. சில சமயம் சரியாக இருந்தாலும் அடுத்த பத்து நாட்களில் அதே நிலைமை தான் ஏற்படுகிறது. இதற்கு ஒர் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும்," என்றார்.



அது ஒரு புறம் இருக்க மழை பெய்தால் மழை நீர் வடியாமல் சுரங்கப்பாதை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துவிடும். அதன் பின்னர் நீர் வெளியேற்றப்பட்டால் சேறுகள் சூழ்ந்து காணப்படும். இதனால், வாகனங்கள் சாலையில் பிடிப்பு தன்மை இல்லாமல் வழுக்கி விடும் நிலை உள்ளது. கழிவுநீர்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன. தற்போது, இந்த மேம்பாலம் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ளது.



இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில், "மழை நீரினை வெளியேற்ற மோட்டார் பம்புகள் உள்ளன. ஆனால், அதில் சேறுகள் வராது. இதனை சீர்படுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. தகடுகள் அகற்றப்பட்டு அதற்கு மாற்று நடவடிக்கைகள் தேவை. இது போன்ற பிரச்சினைகளால் வாகன ஒட்டிகள் சுரங்கப்பாதையை தவிர்த்து பாலத்தின் மேல் பகுதியில் செல்லத் தொடங்கிவிட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது," என்றார்.



மேம்பாலத்தின் மேல் பகுதியில் ரவுண்டானவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்கள் வலுவிழந்து காணப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ரவுண்டானாவில் உள்ள பழைய தடுப்பு சுவர்கள் நெடுஞ்சாலை துறையினரால் சீரமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மேம்பாலத்தின் சுவர்கள், சாலைகள் மட்டுமே எங்களால் சீரமைக்க முடியும். மழை நீர் வெளியேற்றுதல், அதனைப் பராமரித்தல் உள்ளிட்டவற்றை மாநகராட்சி அதிகாரிகள் தான் மேற்கொள்ள வேண்டும்," என்றார்.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "முன் எச்சரிக்கை தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்," என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...