கோவை: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிறுமுகை, காரமடை உள்ளிட்ட இடங்களில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக தினசரி இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இத்தொடர் மழையால் இப்பகுதி விவசாயிகளுக்கு நன்மையளித்து வந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழை இப்பகுதி வாழை விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நேற்று மாலை இடி, மின்னலுடன் துவங்கிய கனமழை பின்னர் பலத்த சூறாவளிக்காற்றுடன் பெய்யத் துவங்கியது.
சுமார் இருபது நிமிடம் வீசிய சூறாவளிக்காற்று காரணமாக, சிறுமுகை, பாலப்பட்டி, ஆலாங்கொம்பு, வெள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது. வாழை மரங்கள் குலைகள் தள்ளிய நிலையில் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மரங்கள் சாய்ந்து விட்டதால் பெரும் இழப்பிற்கு ஆளாகியுள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக சிறுமுகை பகுதியில் பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் நீரில் மூழ்கி பாழாகிய நிலையில் தற்போது சூறாவளிக்காற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.