கோவை: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் இன்று ஒட்டுமொத்த சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்கக் கூடாது என்பதற்காக சாஸ்தா கமிட்டியை ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், தொகுப்பு ஊதிய மதிப்பூதியத்தை ஒழித்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை மாவட்ட ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஒட்டு மொத்த சிறு விடுப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும், வரும் 13-ம் தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெறும் என தெரிவித்தவர்கள், தங்களது கூட்டமைப்பினரை அழைத்து பேசி அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் 27-ம் தேதி முதல், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.