கோவை: மதுக்கரையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி மாதம் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், அங்குள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் அருகே தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் உள்ள மிருகங்கள் மற்றும் வன எல்லைகளில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகளை இந்த சிறுத்தை அடித்து உணவாக உட்கொள்ளும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வனம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குள் யாருக்கும் அனுமதியில்லை என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
வன எல்லைகளில் கோழி கழிவுகளைக் கொட்டுவதால் பெரும்பாலான வன விலங்குகள் ஊரக பகுதிகளுக்குள் நுழைவது தொடர்வாக சிம்ப்ளிசிட்டி முன்னதாகவே செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், மதுக்கரை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே கடந்த ஆண்டு சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
"மதுக்கரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் பொதுவான காரணிதான். இருந்தாலும், எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே வரும்போது சற்று அச்சமாக உள்ளது." என்கின்றனர் அப்பகுதி குடியிருப்பு வாசிகள்.