திருப்பூர் : திடக் கழிவு அள்ளும் வாகனத்தில் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை ஏற்றிச் சென்ற திருப்பூர் மாநகராட்சியின் நடவடிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள மாநகராட்சியின் கீழ் இயங்கும் ஈஸ்வரமுர்த்தி தாய்,சேய நல விடுதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் இருந்து இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருந்துகள் இங்கு கொண்டு வந்த பிறகு, பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த மண்டலங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

நேற்று அவ்வாறு பிரிக்கப்பட்ட மருந்துகள் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் குப்பை அள்ளும் வாகனங்களில் கொண்டு செல்லப்படுவதற்காக ஏற்றப்பட்டது.

காலை குப்பை அள்ளும் பணிகளை முடித்த வாகனங்களை கொண்டு உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பும் பணியினை சுகாதார செவிலியர்கள் மேற்கொண்டது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.