கோவை : அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் லேசான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

நேற்று மாலை சுமார் 8 நிமிடங்கள் வரை இந்த நிலநடுக்கம் நீடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நில அதிர்வின் காரணமாக வீடுகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
நேற்று மழை பெய்வதற்கு முன்னதாக அடித்த மின்னலின் காரணமாக இந்த அதிர்வு ஏற்பட்டதாக ஒரு தரப்பினரும், நிலநடுக்கத்தின் காரணமாகவே வீடுகள் குலுங்கியதாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.
இந்த நிலநடுக்கம் பற்றி பேஸ்புக்கில் உடனடியாக பதிவிட்டதால், காரமடை பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது தெரியவந்தது.