திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் சாலைகளில் குளம் போல தேங்கிய வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதுமே காலை முதல் வெயில் அதிகளவில் இருந்து வந்தது. இதனால், பொதுமக்கள் பெருமளவில் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், திடீரென இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய துவங்கியது. திருப்பூர் மாநகரப்பகுதிகள் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்லடம், காங்கேயம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த கனமழையினால் சாலைகளில் குளம் போல வெள்ளம் தேங்கியது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.