கோவை : பிரிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் பி.எஸ்.ஜி., கல்லூரிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கோவையில் செயல்பட்டு வரும் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பிரிட்டனில் உள்ள பிரபல லீட்ஸ் பல்கலைக்கழகத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தாமஸ் லிசிக்கிவிக்ஸ் மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஆர். ருத்ரமூர்த்தி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இவ்விரு கல்வி நிறுவனங்களிலும் உள்ள மாணவர்களின் இன்டர்ன்ஷிப் மற்றும் பயிற்சிக்காக ஆசிரியர்கள் பரிமாற்றிக் கொள்ளப்படும். மேலும், ஆராய்ச்சிகளில் இருகல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்படுதல், சர்வதேச அளவில் கூட்டுத்தாள்களை இணைந்து வெளியிடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.