சிஸ்கோ சார்பில் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்காக “ஸ்டார்ட்” தயாரிப்புகள் அறிமுகம்

கோவை : 'சிஸ்கோ ஸ்டார்ட்' என்ற பெயரில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு புரொடக்ட் போர்ட்ஃபோலியோவை சிஸ்கோ அறிமுகம் செய்துள்ளது.

கோவை : 'சிஸ்கோ ஸ்டார்ட்' என்ற பெயரில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு புரொடக்ட் போர்ட்ஃபோலியோவை சிஸ்கோ அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் அந்த நிறுவனங்கள், தங்களது டிஜிட்டல் அடித்தளத்தைக் கட்டமைத்து உலக அளவில் போட்டியிடக் கூடிய வாய்ப்பைப்பெற முடியும். தமிழகத்தில் தொழில் துறையில் டிஜிட்டல்மயமாதலை அதிகரித்து மாற்றத்தை ஏற்படுத்தும் சிஸ்கோவின் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் பொருளாதார வளர்ச்சி, உலகத் தரத்திலான புதுமை, நிலைத்த போட்டித்தன்மை, வளம் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கம் எவ்வாறு அதிரிக்கிறது என்றும் விளக்குகிறது.

இதுகுறித்து சிஸ்கோ இந்தியா மற்றும் சார்க்–கின் வர்த்தக விற்பனைப்பிரிவு மேலாண் இயக்குநர் சுதிர்நாயர் கூறியதாவது :- டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி புதுமைகள் அதிகரிக்கும். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் அதிகரிக்கும். டிஜிட்டல் மயமாக்கம் தொழில் முனைவை ஊக்குவிக்கும். தொழில் துறையில் புதுமைகளை வேகப்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கான முன் முயற்சிகளை உருவாக்கி உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும். இந்த இலக்குகளை நோக்கிய பயணத்தில், முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான சிஸ்கோ இந்திய மாநிலங்களின் டிஜிட்டல் மயமாக்கத்திற்கு உதவி வருகிறது. 

மிகவும் வசதியான மற்றும் முற்போக்கான தகவல் தொழில் நுட்பச் சூழலை உருவாக்கி இந்தியாவை டிஜிட்டல் மையமாக மாற்ற சிஸ்கோ உதவுகிறது. இதன் மூலம் தகவல் தொடர்பு, உற்பத்தி மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கும்.

அளவில் இந்தியாவில் 4-வது மிகப்பெரிய மாநிலமாகவும், ஒட்டு மொத்த மாநில உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. தொழிற்கொள்கள் எளிமையாக்கப்படுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் மூலம் தொழில்துறையில் மேலும் வளர்ச்சி அடைவதை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். நாட்டில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். இங்கு வாகனம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மின்னணு வர்த்தகம் உள்ளிட்ட பல பிரிவுகளில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன.

அதிவேக பிராட்பேண்ட் இணைப்புகளை அதிகப்படுத்தும் போது மொபைல் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து அதிக தொலைத் தொடர்பு வசதிகள் ஏற்படும். இவை தமிழகத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும். அந்தத் துறை தற்போது தொழில்நுட்ப சவால்களை சந்தித்து வருகிறது. திறன் குறைபாடு மற்றும் அதிக செலவுகள் ஆகியவை அந்த நிறுவனங்களின் அளவைக் குறைத்து வாய்ப்புகளைப் பறித்து விடுகின்றன. குறைந்த செலவுகள், செயல்பாட்டுத்திறன் அதிகரித்தல், உற்பத்தித்திறன் அதிகரித்தல் ஆகிய மூன்றும் இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தித்தரப்பட வேண்டும் என்று ஐடிசி ஆய்வு கூறுகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஓராண்டில் குறிப்பாக பிப்ரவரி 2017 - ல்சிஸ் கோஸ்டார்ட் அறிமுகம் செய்யப்பட்டபின் புதிதாக சிறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்கள் 5,000 பேரை சிஸ்கோ தளத்தில் கொண்டு வந்துள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...