கோவை : மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் மனைவி பலியான செய்தியைக் கேட்ட கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை ரேயான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாமணி (55). இவரும், இவரது தாயார் மாராத்தாளும் (75) இன்று காலை இருசக்கர வாகனத்தில் அன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, இவர்களது வாகனத்தை முந்தி சென்ற ஒரு வாகனம் மோதிய விபத்தில் பாலாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மாராத்தாள் கால்கள் முறிந்த நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இந்த விபத்து சம்பவம் குறித்து பாலாமணியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவரது கணவர் சண்முகம் அன்னூர் சென்று மனைவின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது, அவருக்கு அதிர்ச்சியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திருமணமானது முதல் சிறு சண்டைகூட இல்லாமல் இணைந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதிகள், மரணத்தையும் இணைந்தே சந்தித்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திள்ளது. இறந்த தம்பதியினருக்கு ஜனனி ( 32) என்ற மகளும், ஸ்ரீதர் வயது (28) என்ற மகனும் உள்ளனர்.