தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம்-வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு சீருடை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம்-வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு சீருடை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசுப்பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பச்சை நிற சீருடை வங்கப்படும். அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பழுப்பு நிற சீருடை வழங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு தலா 4 செட் சீருடைகள் வழங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டு முதல் சீருடை மாற்றம் அமலுக்கு வரும்.

மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. உடனுக்குடன் தேர்வு நடத்தப்படுவதால் மன அழுத்தம் ஏற்படுவதாக பெற்றோரும், மாணவர்களும் கருத்து தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.