கோவை: கோவை மாநகருக்கு சுமித் சரண் ஐ.பி.எஸ்-ஐ புதிய காவல் ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை: கோவை மாநகருக்கு சுமித் சரண் ஐ.பி.எஸ்-ஐ புதிய காவல் ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது பதவியில் இருக்கும் மேற்குமண்டல ஐஜி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, தற்போதைய காவல் ஆணையர் பெரியய்யா மேற்குமண்டல ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து காலியாக இருந்த கோவை மாநகர காவல் ஆணையர் பதவிக்கு சுமித் சரண் ஐ.பி.எஸ்-ஐ நியமித்து தமிழக கூடுதல் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.
பதவியேற்க இருக்கும் சுமித் சரண் தற்போது சென்னையில் ஐ.ஜி-யாக பணியாற்றி வருகிறார். இன்னும் ஒரு சில தினங்களில் அவர் கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.