கோவை நீதிமன்றத்தில் வழக்கு விபரங்களை அறிந்துகொள்ள தொடுதிரை கருவி அமைப்பு

கோவை: வழக்கு விபரங்களை நீதிமன்றங்களுக்குள் சென்று பார்ப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, வழக்காளிகளுக்காக கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விபரங்கள் அடங்கிய தொடுதிரை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: வழக்கு விபரங்களை நீதிமன்றங்களுக்குள் சென்று பார்ப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, வழக்காளிகளுக்காக கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விபரங்கள் அடங்கிய தொடுதிரை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை வழக்காளிகள் அவ்வப்போது சம்பந்தப்பட்ட  நீதிமன்றங்களுக்கு சென்றே அறிந்து கொள்ள வேண்டும். இதனிடையே வழக்கு விபரங்கள் அண்மையில் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.



இந்த முறையில் வழக்கு விபரங்கள் மறுநாளே பதிவேற்றம்ம் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கின் நிலை குறித்த தகவல்களை உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதன் செயல்பாட்டை துவக்கி வைத்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் வழக்காளிகள் பயன்பெறும் வகையில் இந்த தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களது நேரம் விரயமாகுதல் தவிர்க்கப்படும் என்றும் கூறினார்.



இந்த தொடுதிரை இயந்திரத்தில் வழக்குகளின் விபரங்கள் மட்டுமின்றி, தீர்ப்பாகும் வழக்குகள் குறித்த விபரமும் தீர்ப்பின் விபரமும் நீதிமன்றத்தில் நடைபெறும் அதே வேளையில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை வழக்காளிகள் காணலாம் என்றும் குறிப்பிட்டார்.

கோவை நீதிமன்றத்தில் இரண்டு தொடுதிரை இயந்திரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக ஒரு தொடுதிரை துவக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மற்றொரு தொடுதிரை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...