கோவை: பாரதியார் பல்கலைக் கழகத்தின் சமூக நலத்துறை மாணவர்கள் கோவை காந்திபார்க் பகுதியில் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இந்த பேரணியை, மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் சுஜித்குமார் தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் '100-ல் சென்று 108-ஐ அடையாதே' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சாலையில் ஊர்வலமாகச் சென்றனர்.

மேலும், மது போதையிலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள், போக்குவரத்து உதவி ஆணையர்கள், ஆணையர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். அப்போது துணை ஆணையர் சுஜித் குமார் பேசுகையில், "கோவையில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது விபத்து வழக்குகள் குறைந்துள்ளன. பொதுமக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பதே இதற்கு காரணம்." என்றார்.