உடல் நலக்குறைவு காரணமாக கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: எம்.எல்.ஏ கருணாசுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: எம்.எல்.ஏ கருணாசுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ், சட்டசபை தேர்தலில் திருவாடானை தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சமீபத்தில் தனது அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரையும் காவல்துறை உயர் அதிகாரியையும் அவதூறாக பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கைதான அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கருணாஸ்-க்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

முதலமைச்சருக்கு எதிராக கருணாஸ் தொடர்ந்து பேசி வருவது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று அ.தி.மு.க. கருதுகிறது. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...