கோவை மாவட்ட நெடுஞ்சாலைகளில் லாரிகளை நிறுத்த தடை: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

கோவை: விபத்துகளை தடுக்க கோவை மாவட்ட நெடுஞ்சாலைகளில் லாரிகளை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை: விபத்துகளை தடுக்க கோவை மாவட்ட நெடுஞ்சாலைகளில் லாரிகளை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த பயங்கர விபத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.



அதன்படி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், வால்பாறை, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பேசியதாவது:-

நெடுஞ்சாலை ஓரங்களில் லாரிகளை நிறுத்தக்கூடாது. இதனால் நிற்கும் லாரிகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. நெடுஞ்சாலைகளை விட்டு சற்று தள்ளி உள்ள பகுதிகளில் லாரிகளை நிறுத்தி ஓட்டுனர்கள் ஓய்வெடுக்கலாம். குடிபோதையில் உள்ள ஓட்டுனர்களை வேலைக்கு பயன்படுத்தக்கூடாது.

லாரி ஓட்டுனர்களை பணியில் அமர்த்தும் போது உரிமையாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். நீண்ட தூரம் லாரிகளை ஓட்டிச் செல்லும்போது இரண்டு ஓட்டுனர்களை லாரி உரிமையாளர்கள் பணிக்கு அமர்த்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்கிறதா? என்பதை கண்காணிக்க லாரிகளில் ஜி.பி.எஸ் கருவி பொருத்த வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் செல்லும் போது பழுதானால் லாரியை ஓரமாக நிறுத்தி பழுதை சரி செய்யும் போது மற்ற வாகனங்களுக்கு லாரி நிற்பது தெரியும் வகையில் சிகப்பு முக்கோண சின்னத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளி பண்டிகை வர இருப்பதால் பட்டாசுகளை பாதுகாப்புடன் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் பேசுகையில், "அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மற்றும் குறுகிய சாலைகளில் வாகன சோதனை நடைபெறுகிறது. இதனால் விபத்துகள் நடைபெறுகிறது. சில பகுதிகளில் லாரிகளில் டீசல் திருடும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க காவல்துறையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்." என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...