திருப்பூர்: மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் அவரது அஸ்திக்கு குழந்தைகள் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் காந்தி நகர் பகுதியில் உள்ள காதி வஸ்துராலாயம் வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அவர்களின் அஸ்தி கடந்த பல வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி மற்றும் நினைவு தினங்களில் இங்கு பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்த வருவது வழக்கம்.
இந்த நிலையில், காந்தியின் 150 வது ஜெயந்தியை முன்னிட்டு பாலர் இயக்கத்தை சேர்ந்த சிறுவர்-சிறுமியர் 100க்கும் மேற்பட்டோர் காந்தியின் முகமுடி அணிந்து காந்தியின் அஸ்தி உள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.