திருப்பூர் : பின்னலாடை தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள அரசாணையைத் திரும்ப பெறக்கோரி திருப்பூரில் நடைபெற்ற அனைத்து பனியன் சங்க கூட்டு கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பின்னலாடை மற்றும் பின்னலாடை சார்ந்த தொழிலில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு தொழிலாளர்கள் ஊதியத்தை குறைத்திடும் வகையில் ஹொசைரி தயாரிப்பு தொழில் தொடர்பான அரசாணையினை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது.
இதனால், தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த சம்பளம் குறைவதற்கான வாய்ப்பிருப்பதால் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பின்னலாடை தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு தொழிலாளர்களுக்கு எதிரான ஹொசைரி தயாரிப்பு தொழில் தொடர்பான அரசாணையை திரும்ப பெறவேண்டும் என சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பின்னலாடை நிறுவனங்கள் தீபாவளிக்கு 20 நாட்கள் முன்னதாக போனஸ் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.