கோவை: காந்தி ஜெயந்தி முன்னிட்டு கோவை மாவட்டம் மத்வராயபுரம் ஊராட்சியில் உள்ள மலைவாழ் கிராமமான நல்லூர் பகுதியில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆண்டுதோறும் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) மற்றும் அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதிலும் உள்ள கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் படித்தவை.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். இத்தகையை சிறப்பு அதிகாரங்கள், அங்கீகாரங்கள் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு உண்டு.
இந்த நிலையில், கோவை மாவட்டம் மத்வராயபுரம் ஊராட்சியில் உள்ள மலைவாழ் கிராமமான நல்லூர் பகுதியில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதி வாக்காளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக மகளிருக்கு இலவச வெள்ளாடுகள் வேண்டி விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டது.
மேலும், சிறுவாணி விழுதுகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக, சாடிவயலில் உள்ள சின்னாறு மற்றும் நல்லூர் வயலில் உள்ள மச ஓரம்பு ஆகிய ஆறுகளில் சிலர் சுய நோக்கத்திற்காக அவர்களது வீட்டில் கழிவறை நீரை மழை நீர் வடிகாலில் கலக்கி ஆற்றின் புனிதத்தை கெடுத்து வருவதாகவும், இதனால் வன மிருகங்களும் கிராம மக்களும் பாதிக்கப்படுவதாகவும், இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கை, குடியரசுத் தலைவர் உட்பட அனைத்து அரசுத் தரப்புக்கும் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.