கோவை : முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு நாளையொட்டி உருமாண்டபாளையம் அரசு பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில், கல்விக் கண் திறந்தவர் என்ற பெருமையைக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவரது ஆட்சி காலத்தில் ஏழை மாணவர்களின் கல்வி கனவை நினைவாக்கும் வகையில், இலவச மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் அரசு பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் வெற்றி திட்டமான மதிய உணவுத் திட்டத்தை, போற்றும் வகையில் இலவச உணவு வழங்கிய பள்ளி என்ற பெருமையை இந்தப் பள்ளி பெற்றுள்ளது.

இந்தப் பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை பின்னடைவாகவே உள்ளது. வெறும் 60 மாணவர்களுக்கு இரு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
முன்னாள் மானவர்கள், குடியிருப்புவாசிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அதோடு, திருவள்ளூர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யு.ஆர். கிருஷ்ணன், வின்னர் இந்தியா சி.கே. கிருஷ்ணன், ஏ.குமாரசாமி, யு.கே. பாபு, ஆடிட்டர் ஜி. ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடு வளமுடன் இருக்க மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.