நீலகிரி : குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி : குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக குன்னூர் கோத்தகிரி பகுதியில் இரவு நேரங்களில் மட்டும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், மேல் பாரத் நகர் மற்றும் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து மரங்கள் சாலையில் சரிந்து விழுந்தன. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, குன்னூர் தீயணைப்பு நிலைய அதிகாரி குமார் தலைமையிலான வீரர்கள் முரளி, சுப்ரமணி, கண்ணன், கதிரவன், ரஞ்சித் உள்ளிட்டோர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினர்.
இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், விடுமுறையை கழிக்க உதகை நோக்கி சென்ற சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.