மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளி பலி : மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

கரூர் : உயர்மின் அழுத்தம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் ஒப்பந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூர் : உயர்மின் அழுத்தம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் ஒப்பந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கரூர் மாவட்டம் புரவிபாளையத்தை சேர்ந்தவர் கே. செந்தில்குமார் (38). மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை க.பரமத்தி அருகே பவித்திரம் கீழ்புறம் பகுதியில் உயிர்மின் அழுத்தம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவருடன் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு தொழிலாளியான காளிமுத்து (45) என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இச்சம்பவம் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சத்தியத்தால் தான் நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 

இது குறித்து அச்சங்கத்தின் கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில், "இதற்கு காரணமான அதிகாரியை தண்டிக்க வேண்டும். இறந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். அதேபோல, அரசு தரப்பில் உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுவரை மின்வாரிய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அவர்கள் வரும் வரை கே. செந்தில்குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...