கோவையில் லயன்ஸ் கிளப் மற்றும் தேசபக்தர் அமைப்பின் சார்பில் மகாத்மாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை : மகாத்மாவின் காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, லயன்ஸ் கிளப் ஆப் அரிஸ்டோ மற்றும் தேசபக்தர் அமைப்பின் சார்பில் மகாத்மாவின் திருவுருவ படத்திற்கும், கதர் தயாரிக்கும் இராட்டினத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை : மகாத்மாவின் காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, லயன்ஸ் கிளப் ஆப் அரிஸ்டோ மற்றும் தேசபக்தர் அமைப்பின் சார்பில் மகாத்மாவின் திருவுருவ படத்திற்கும், கதர் தயாரிக்கும் இராட்டினத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கிய பங்காற்றின தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழாவானது ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நமது இந்திய சுதந்திர போராட்டத்தை இளைஞர்கள் மத்தியில் நினைவூட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில், கோவை பந்தைய சாலையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இன்று மரியாதை செலுத்தினர். அத்துடன் பொதுமக்களின் பார்வைக்காக சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய ஆயுதமாகப் பார்க்கக்கூடிய ராட்டினமும் வைக்கப்பட்டிருந்தது. 



இது 15 அடி நீளமும், 9 அடி உயரமும், 6.5 அகலமுள்ள மாதிரி ராட்டினமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ராட்டினத்தை கோவையில் உள்ள பல்வேறு மக்கள் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா தொடங்கி வைத்தார். அத்துடன் லயன்ஸ் கிளப்பின் உறுப்பினர்கள், தேசபக்த அமைப்பின் உறுப்பினர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். இதில், பள்ளி சிறுவர்கள் காந்தியின் வேடமணிந்து விழாவில் கலந்து கொண்டனர்.



மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் பேசியதாவது :- சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான ஆயுதம் கதர் ஆடை உடுத்துவது என்ற கொள்கையும், வெளிநாட்டு துணிகளை பயன்படுத்தக்கூடாது என்பதே ஆகும். இந்த முடிவானது ஆங்கிலேயர்களின் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை கொடுத்தது. 

இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கதர் ஆடையை தயாரிக்க பயன்படுத்தும் ராட்டினத்தின் முக்கியத்துவத்தையும் காந்தி அவர்களின் வாழ்க்கையையும் இளைஞர்கள் அறிந்து கொள்ள இந்த ராட்டினத்தை பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளோம். அதேபோல. உலகிலேயே மிகப்பெரிய ராட்டினத்தை கோவை சாவடி பகுதியில் வைக்க நாங்கள் முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்," என்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...