காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 'தூய்மை சாலை'யை உருவாக்க களமிறங்கியுள்ள தன்னார்வலர்கள்

கோவை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலையை இணைக்கும் 2 கி.மீ நீளமுள்ள இணைப்பு சாலையை தூய்மை படுத்தும் பணிகளை ராக் தலைமையிலான தன்னார்வ அமைப்புகள் இன்று தொடங்கினர்.


கோவை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலையை இணைக்கும் 2 கி.மீ நீளமுள்ள இணைப்பு சாலையை தூய்மை படுத்தும் பணிகளை ராக் தலைமையிலான தன்னார்வ அமைப்புகள் இன்று தொடங்கினர்.



பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களைக் கொண்ட ஜி.வி.ரெசிடண்டி இணைப்பு சாலையை சுத்தம் செய்யும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார்.



'ஸ்வச் ரோடு' எனப்படும் தூய்மையான சாலையை உருவாக்குவதற்காக ராக் அமைப்பினர், ஜி.வி.ரெசிடன்சி நலச் சங்கத்தினர், சன்னிசைட் குடியிருப்பு நல சங்கத்தினர், பி.எஸ்.ஜி.மருத்துவமனை அலுவலர்கள், நேஷனல் மாடல் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஊழியர்களோடு இணைந்து ஜி.வி.ரெசிடன்சி இணைப்பு சாலையை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.



சாலையை ஆக்கிரமித்திருந்த செடிகள், ஃப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் குப்பைகளை தன்னார்வலர்களின் உதவியதோடு மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், இந்த சாலையின் மின் விளக்குகள் புனரமைக்கப்பட்டு, மழையால் ஏற்பட்டுள்ள குழிகள் தார் பூசப்பட்டு சீரமைக்கப்பட உள்ளதாகவும், வாரந்தோறும் தன்னார்வலர்கள் இணைந்து சாலையை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் ராக் அமைப்பைச் சேர்ந்த ரவீந்தரன் தெரிவித்தார்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...