நீலகிரி : மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உதகையில் அவரது அஸ்திக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகளை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வாயிலாக இந்திய திருநாட்டிற்கு 1947-ம் ஆண்டு ஆக்ஸ்ட் 15-ம் தேதி விடுதலைப் பெற்று தந்தவர்களில் முக்கிய பங்காற்றியவர் மகாத்மா காந்தியடிகள். இவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தேசிய விடுமுறையளித்தும், பள்ளி மாணவர்கள் அறியும் வகையில் பாடப் புத்தகங்களில் காந்தியடிகளின் வரலாறு குறித்த பாடங்களும் அரசின் சார்பில் போதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் அஸ்தி, இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, நீலகிரி மாவட்டம் உதகைக்கும் எடுத்துவரப்பட்டது. அவரின் அஸ்தியும், திருநீர் அடக்கி உதகை மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இவரது பிறந்தநாள், நினைவுநாள், சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் நாட்களில் இவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ள அலங்கார கட்டிடத்திற்கு முன் பூஜை, புலஸ்காரங்கல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், காந்தியடிகள் அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தை உள்ளூர் மக்கள் வணங்கி வருகின்றனர். இதேபோல, அக்டோபர் 2-ம் தேதி கல்வியின் தந்தை என்று எல்லோராலும் போற்றப்படும் கர்ம வீரர் காமராஜரின் நினைவு தினமாகும். அவரது அஸ்தியும் இங்கு வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.