கோவை : மதுக்கரை முன்னாள் வன அதிகாரி எஸ். கண்ணன் மீதான பாலியல் புகார் குற்றச்சாட்டு குறித்து நியமிக்கப்பட்ட புதிய விசாரணைக் கமிட்டி நாளை முதல் தனது விசாரணையை தொடங்குகிறது.

முன்னாள் மதுக்கரை வனக் கோட்டத்திற்குட்பட்ட வன அதிகாரி எஸ். கண்ணன் மீது கோவை மாவட்ட வன அலுவலரிடம் பெண் ஒருவர் கடந்த ஜுலை 23-ம் தேதி பாலியல் புகார் அளித்தார். இந்த விவகாரத்தை மேலிடத்திற்கு எடுத்துச் செல்லாமல், வன அதிகாரி மீதான புகார் குறித்து விசாரிக்க கோவை மாவட்ட வன கண்காணிப்பாளர் ஆர். கலாமணி மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து தகவலறிந்த தலைமை வன பாதுகாப்பு அதிகாரி தீபக் வத்ஸவா, பெண் அளித்த பாலியல் புகார் தொடர்பாக தனக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல், குழு அமைத்து விசாரணை நடத்தப்படுவதாகக் கூறினார். இதனையடுத்து, இந்தப் புகார் குறித்து வெளிப்படையான விசாரணை நடைபெற வன அதிகாரி எஸ். கண்ணனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அவர், கடந்த 23-ம் தேதி மேலதிகாரிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.
அதற்கு கிடைத்த பதில் கடிதத்தில், மதுக்கரை வனக் கோட்டத்திற்குட்பட்ட வன அதிகாரி எஸ். கண்ணனை வேலூர் மாவட்டத்திற்கு அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்ய அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், விசாரணை வெளிப்படையாக நடைபெறும் நோக்கில், கடந்த மாதம் 27-ம் தேதி உதவி வன பாதுகாவலர்கள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் என 4 பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட குழுவை தீபக் வத்வஸவா நியமித்துள்ளார்.
சேலம் உதவி வன பாதுகாவலர் எஸ்.பிரபா தலைமையிலான இந்தக் குழுவில், தலைமை வன பாதுகாவலரின் தனி உதவியாளர் கே. உஷாதேவி, தலைமை வன பாதுகாவலரின் அலுவலக பணியாளர் கே. ராஜேஸ்வரி, ஓசை தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி எழில் உள்பட பி. ராஜேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள வன அதிகாரி எஸ். கண்ணன் கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்ததால், விசாரணையைத் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், எஸ்.பிரபா தலைமையிலான குழுவின் விசாரணை நாளை முதல் தொடங்குகிறது. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நியமிக்கப்பட்ட முந்தைய குழுவினர், சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட இருக்கிறது.