குடும்ப தகராறு காரணமாக கோவையில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

கோவை : குடும்ப தகராறு காரணமாக ஆயுதப்படை காவலர் ஒருவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : குடும்ப தகராறு காரணமாக ஆயுதப்படை காவலர் ஒருவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த சமுத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகவேலுவின் மகன் முருகப்பன். இவர், 2013-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். மேலும், காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திலுள்ள ஆயுதப்படையில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். தனது மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திலுள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்த முருகப்பன், கடந்த வாரம் குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி மற்றும் குழந்தையை விட்டு தனித்து இருந்து வந்தார்.

இந்த நிலையில், மனஉளைச்சலுடன் காணப்பட்ட அவர், நேற்று மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். மீண்டும் அவர் பணிக்கு வர கால தாமதம் ஆனதால், சந்தேகமடைந்த உடன் பணியாற்றும் காவலர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, காவலர் முருகப்பன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர், அங்கிருந்த சக காவலர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்று பந்தைய சாலை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காவலர் முருகப்பன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...