நீலகிரி : உதகையில் நொண்டி மேடு பகுதியில் மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அண்மைக் காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இவை அவ்வப்போது மனிதர்களை தாக்குவதும், விலங்குகளை வேட்டையாடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், உதகை அருகே உள்ள நொண்டிமேடு பகுதியில் புதருக்குள் இருந்து வேகமாக வந்த சிறுத்தை ஒன்று அங்கு மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த ஆட்டினை வேட்டையாடி சென்றதை அங்கிருந்தவர்கள் கண்டு அச்சமடைந்தனர்.
இதையடுத்து, கால்நடைகளை வேட்டையாடுவதற்காக சிறுத்தை பதுங்கியிருக்கும் புதர்களை அழித்து, வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என வனத்துறையினருக்கு கால்நடை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.