கோவை : ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் இரத்தத்தினால் கையெழுத்திட்டு நூதன போராட்டம் நடத்தினர்.
கோவை : ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் இரத்தத்தினால் கையெழுத்திட்டு நூதன போராட்டம் நடத்தினர்.
ஊராட்சி செயலாளர்கள், பதுவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கடந்த 28.12.2017-ல் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஏற்றுக் கொள்ளப்பட்டு விரைவில் அரசாணை வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டது.

அரசு ஏற்றுக்கொண்ட ஊதிய மாற்றத்திற்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி கடந்த ஜூலை 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடமிருந்து ரூ. 30 கோடி ஊதியம் பிடித்தம் செய்யபட்டது.

தொடர் நினைவூட்டல்கள் மூலம் அரசிற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டும் இதுவரை அரசாணை பிறப்பிக்கப்படாததை முன்னிட்டு, தமிழக அரசு ஏற்றுக் கொண்ட பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் நினைவூட்டல் கடிதத்தில் ரத்த கையெழுத்திட்டனர். இதனை முதலமைச்சர், துணை முதலமைச்சர், நீதித்துறை செயலர், ஊரக வளர்ச்சி துறை செயலர் மற்றும் இயக்குனருக்கு என காந்தி ஜெயந்தி நாளான நாளை ஒரு லட்சம் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்ப உள்ளனர்