கோவை : சுந்தராபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் ஜெகதீஸ்குமாருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சுந்தராபுரம் பகுதியில் கடந்த ஆக.,1-ம் தேதி அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஜெகதீஸ்குமாரை கைது செய்த போலீசார், அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி கார் ஓட்டுநர் ஜெகதீஸ்குமார் சார்பில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோவை 8-வது குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி, நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கி உத்தரவிட்டார். ஏற்கனவே, ஓட்டுநர் ஜெகதீஸ்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.